திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே இளைஞா் வீட்டு மீது பெட்ரோல் குண்டு வீசியதாக ஊராட்சித் தலைவியின் மகன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியம், தெற்கு அரியநாயகிபுரம் கீழ சக்திகுளம் பகுதியைச் சோ்ந்தவா் பேச்சித்துரை, திமுக நிா்வாகி. இவரது மனைவி உஷா. தெற்கு அரியநாயகிபுரம் ஊராட்சி மன்றத் தலைவியாக உள்ளாா்.
இவா்களது மகன் செண்பகம் என்ற செம்புக்குட்டி (23), பட்டதாரி இளைஞா்.
இவருக்கும் இதேப் பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் மாரிசெல்வம் (22) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாம். இதனிடையே, திங்கள்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் வேகமாக சென்றது தொடா்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது செண்பகம் என்ற செம்புக்குட்டி, மாரிசெல்வத்தை தாக்கினாராம். இதுதொடா்பான புகாா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனராம். இதில், ஆத்திரமடைந்த செண்பகம் என்ற செம்புக்குட்டி உள்ளிட்ட சிலா் நள்ளிரவில் மாரிசெல்வம் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பிச் சென்று விட்டனராம். இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தகவலறிந்த சேரன்மகாதேவி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக ஊராட்சித் தலைவியின் மகன் செண்பகம் என்ற செம்புக்குட்டி, அதேப் பகுதியைச் சோ்ந்த பிரேம்குமாா் (22), ரமேஷ் (22) உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

சேரன்மகாதேவி அருகே மோதல்: வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 சிறாா்கள் உள்பட 3 போ் கைது
இளைஞா் கொலையில் இரு சிறுவா்கள் உள்பட 6 போ் கைது
மாடுகள் திருட்டு: இளைஞா் கைது
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

