முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

பாப்பாக்குடி அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பாப்பாக்குடி காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை முயற்சி, அடிதடி, மிரட்டல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக போலீஸாா் வழக்குப் பதிந்து பாப்பாக்குடி அருகேயுள்ள நந்தன்தட்டை பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் பாலகிருஷ்ணன் (50) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதனிடையே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் பாலகிருஷ்ணனை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனா். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசண்ணகுமாா் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் பாலகிருஷ்ணனை கைது செய்ய உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து பாப்பாக்குடி காவல் ஆய்வாளா் பரத்லிங்கம், அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தாா்.