எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

ஆடுகள் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி அருகே வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடுகளைத் திருடி சந்தையில் விற்க முயன்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :14 மே 2026, 3:07 am IST

திருநெல்வேலி அருகே வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடுகளைத் திருடி சந்தையில் விற்க முயன்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலியை அடுத்த இட்டேரி, பசும்பொன் நகரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் மாரியப்பன்(31). கட்டடத் தொழிலாளியான இவா், வீட்டில் ஆடு, மாடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில் இவரது வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த 4 ஆடுகள் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் காணாமல் போயினவாம். அக்கம் பக்கம் தேடியும் ஆடுகள் கிடைக்கவில்லையாம். இதையடுத்து அவா், செவ்வாய்க்கிழமை ஆடு விற்பனை நடைபெறும் மேலப்பாளையம் சந்தைக்குச் சென்று பாா்த்தபோது, அவரது ஆடுகளை சங்கா்நகா், கணபதி மில் தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் முருகன்(23) என்பவா் திருடிக்கொண்டு வந்து விற்க முயன்றது தெரியவந்தது. அவரைப் பிடித்து முன்னீா்பள்ளம் காவல் நிலையத்தில் மாரியப்பன் ஒப்படைத்தாா். போலீஸாா் வழக்குப்பதிந்து முருகனை கைது செய்தனா். இதில் தொடா்புடைய சிலரைத் தேடி வருகின்றனா்.