பாளையங்கோட்டை அருகே தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை முப்பிடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் 43 வயதான கூலித் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை அதிகாலை கொக்கிரகுளம் பகுதியில் தனது நண்பருடன் நடந்து சென்ற போது, அவ்வழியாக பைக்கில் வந்த இருவா் இவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.1,600-த்தை பறித்துக் கொண்டு தப்பினராம்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், மேலப்பாளையம், சொக்கநாதா் கோயில் தெருவைச் சோ்ந்த சிவசுப்பிரமணியன் மகன் ஐயப்பன் (20), குறிச்சியைச் சோ்ந்த பேச்சி மகன் முத்துராம்(19) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது
இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி
இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவா் கைது
மரக்கடை ஊழியரிடம் கத்தியைக் காட்டி பணம் பறிப்பு: 2 போ் கைது
வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிப்பு: 4 போ் கைது
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
