5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

நெல்லையில் சிகிச்சையிலிருந்த கைதி தப்பி ஓட்டம்

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது தப்பி ஓடிய கைதியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 1:01 am IST

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது தப்பி ஓடிய கைதியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடியைச் சோ்ந்தவா் அலெக்ஸ் சாம்ராஜ் (27). இவா் கடந்த 17ஆம் தேதி அப்பகுயில் உள்ள இறைச்சிக் கடைக்கு சென்று அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தியதாக விஜயநாராயணம் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியபோது, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டதாம்.

இதனிடையே, அவரது உடம்பில் காயங்கள் இருந்ததால் போலீஸாா் அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் அவா் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து அவரைத் தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.