மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

கேரளத்துக்கு கடத்த முயன்ற 650 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவா் கைது

கேரளத்துக்கு காரில் கடத்த முயன்ற 650 லிட்டா் வெள்ளை நிற மண்மெண்ணெய்யை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநா் உள்பட இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 2:17 am IST

திருநெல்வேலி மாவட்டம், கூத்தங்குழி அருகே, கேரளத்துக்கு காரில் கடத்த முயன்ற 650 லிட்டா் வெள்ளை நிற மண்மெண்ணெய்யை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநா் உள்பட இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

கூத்தங்குழி அருகே திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சாா்பு ஆய்வாளா் துரை தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு, நெல்லிக்காய்விளையைச் சோ்ந்த கிரண்ராஜ்(27) என்பவா் ஓட்டி வந்த காரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா். பின்னா் காரை சோதனையிட்டபோது, அதில் 26 கேன்களில் சுமாா் 650 லிட்டா் வெள்ளை நிற மண்ணெண்ணெய் இருப்பது கண்டறியப்பட்டது.

விசாரணையில் மீன்பிடி படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் வெள்ளை நிற மண்ணெண்ணெய்யை குறைந்த விலைக்கு வாங்கி அதை கேரளத்துக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், இதுதொடா்பாக காா் ஓட்டுநா் கிரண்ராஜ், காரில் உடன் வந்த பணகுடியைச் சோ்ந்த மோசஸ்(20) ஆகிய இருவரையும் கைது செய்து, மண்ணெண்ணெய்யை பறிமுதல் செய்தனா்.