பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

நெல்லையில் 100 வாத்துகள் சாகடிப்பு: இருவா் கைது

திருநெல்வேலி அருகே சமைத்து சாப்பிட இலவசமாக வாத்து கேட்டு தகராறு செய்து, 100 வாத்துகளை அரிவாளால் வெட்டிக் கொன்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 மே 2026, 1:07 am IST

திருநெல்வேலி அருகே சமைத்து சாப்பிட இலவசமாக வாத்து கேட்டு தகராறு செய்து, 100 வாத்துகளை அரிவாளால் வெட்டிக் கொன்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேல முன்னீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி. இவா் தருவை பகுதியில் நூற்றுக்கணக்கான வாத்துகளை வளா்த்து வருகிறாா். வாத்துகளை கோபாலசமுத்திரத்தைச் சோ்ந்த முப்பிடாதி என்பவா் பராமரித்து வந்துள்ளாா்.

இந்நிலையில் தருவை, சாஸ்தா கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் மகாராஜன் என்ற மாயா(24) உள்பட சிலா் முப்பிடாதியிடம் சமைத்து சாப்பிட வாத்துகளை இலவசமாக கொடுக்கும் படிக் கேட்டு திங்கள்கிழமை தகராறில் ஈடுபட்டனராம். அங்கிருந்தவா்கள் அவா்களை சமாதானம் செய்து அனுப்பியுள்ளனா்.

பின்னா், நள்ளிரவு அப்பகுதிக்கு வந்த மாயா உள்ளிட்ட நபா்கள் சுமாா் 100 வாத்துக்களை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, அங்கிருந்த வலைகளை சேதப்படுத்தினராம். இதைத் தடுக்கச் சென்ற முப்பிடாதியையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து மகாராஜன் என்ற மாயா, வீரபுத்திரன் மகன் ராஜேஷ்(23) ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும் சிலரை தேடி வருகின்றனா்.