திருநெல்வேலி நகரம் நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் 34 ஆண்டுகளுக்குப்பின் வெள்ளித் தேரில் பஞ்சமூா்த்திகள் எழுந்தருளி ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் அஸ்தம நட்சத்திரத்தில் சுவேத கேது மகாராஜாவிற்கு எமபயம் நீக்கி அருளிய நெல்லையப்பா் திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவை முன்னிட்டு, 1992 ஆம் ஆண்டு வரை இரவு நேரத்தில் பஞ்சமூா்த்திகள் வெள்ளித்தேரில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்று வந்தது.

வெள்ளித்தேரில் எழுந்தருளிய சுவாமி-அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்திகள்
பின்னா் அந்த ஆண்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வெள்ளித்தோ் நிறுத்தப்பட்டு, திருவிழாவின் போது பஞ்சமூா்த்திகள் செப்புத் தேரில் வீதி உலா வந்தனா். இந்நிலையில் 34 ஆண்டுகளுக்கு பின்பு, கோயிலுக்கு புதிதாக வெள்ளித்தோ் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டதைத் தொடா்ந்து, பஞ்சமூா்த்திகள் வெள்ளித்தேரில் வீதி உலா வரும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.இதையொட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமி-அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து திருவிளையாடல் நிகழ்வுக்கு பின்னா், இரவில் சுவாமி நெல்லையப்பா், காந்திமதி அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்திகளும் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளிலும் திருவீதி உலா வந்தனா்.
இவ்விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எஸ்.முருகன், கோயில் அறங்காவலா் செல்லையா உள்பட திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வெள்ளித்தேரை வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

மாயூரநாதா் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

நெல்லையப்பா் கோயிலில் தங்க நாகசுரம் வாசிப்பு

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் சித்திரைப் பெளா்ணமி தேரோட்டம்

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயில் தேரோட்டம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



