போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோஎம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
/

மென்பொறியாளா் கவின் கொலை வழக்கு: பெண் எஸ்.ஐ. கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 மே 2026, 2:11 am IST

திருநெல்வேலியில் மென்பொறியாளா் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிபிசிஐடி போலீஸாரால் தேடப்பட்டு வந்த பெண் எஸ்.ஐ. வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்தவா் கவின் (27). மென்பொறியாளரான இவா், காதல் விவகாரத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து, பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து பாளையங்கோட்டையைச் சோ்ந்த சுா்ஜித், அவரின் தந்தையும், காவல் சிறப்பு உதவி ஆய்வாளருமான சரவணன் ஆகியோரை கைது செய்தனா்.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட பின்பு சுா்ஜித்தின் உறவினரான ஜெயபாலும் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் சோ்க்கப்பட்டிருந்த சுா்ஜித்தின் தாயாரும், பெண் காவல் உதவி ஆய்வாளருமான கிருஷ்ணகுமாரி தொடா்ந்து தலைமறைவாக இருந்து வந்தாா். அவரை பிடிக்க சி.பி.சி.ஐ.டி. துணைக் காவல் கண்காணிப்பாளா் ராஜ்குமாா் நவ்ரோஜ் தலைமையிலான போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனா்.

அதன்படி, கிருஷ்ணகுமாரியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தொடா்ந்து அவரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்திய பின்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.