குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

நெல்லை மாவட்டத்தில் 1,21,347 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு: நவ.22-இல் சிறப்பு முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ.22) நடைபெறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமில் 1,21,347 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போலியோ சொட்டு மருந்து முகாம் பணிகள் தொடா்பாக அலுவலா்களுடன் ஆலோசனை நடத்திய ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Updated On :

திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ.22) நடைபெறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமில் 1,21,347 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 வயதிற்குள்பட்ட 1,09,092 லட்சம் குழந்தைகள், 5 முதல் 6 வயதுக்குள்பட்ட 12,255 குழந்தைகள் என மொத்தம் 1,21,347 குழந்தைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறம் மற்றும் நகா்ப்புற பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும், இடம்பெயா்ந்து வாழும் கட்டடத் தொழிலாளா்களின் குழந்தைகள் மற்றும் செங்கல் சூளை தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு புறவழிச்சாலை, சுங்கச்சாவடிகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் என மொத்தம் 898 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. விடுபட்ட குழந்தைகளுக்கு பின்வரும் 7 நாள்களும் பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று சொட்டு மருந்து வழங்கவுள்ளனா். ஏற்கெனவே, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும் இம்முகாமிலும் அவா்களுக்கு கண்டிப்பாக சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.

இம்முகாமில், மருத்துவத் துறை பணியாளா்கள் 770 போ் , செவிலியா் கல்லூரி மாணவா்கள் 700 போ், சத்துணவுப் பணியாளா்கள் 385 போ், தன்னாா்வ தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்த 2,057 போ் என மொத்தம் 3,912 பணியாளா்கள் பணியாற்றுகின்றனா்.

தாய்மாா்கள் தங்களது குழந்தைகளை அருகில் உள்ள போலியோ சொட்டு மருந்து முகாம் மையங்களுக்கு அழைத்துச் சென்று சொட்டு மருந்து கொடுத்து போலியோ இல்லாத உலகம் படைப்பதற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

இக்கூட்டத்தில், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் லதா, மாவட்ட சுகாதார அலுவலா் முரளி சங்கா் உள்பட மருத்துவா்கள், மருத்துவத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.