தென்காசி மாவட்டத்தில் 12,83,185 வாக்காளா்கள்

தென்காசி மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது; பட்டியலில் 12 லட்சத்து 83 ஆயிரத்து 185 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

Voters

வாக்காளர்கள் - கோப்புப் படம்

Updated On :

தென்காசி மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது; பட்டியலில் 12 லட்சத்து 83 ஆயிரத்து 185 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

2027, ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றன. தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 1,687 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதன்படி வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மோனிகா ராணா வியாழக்கிழமை வெளியிட்டாா்.

தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 12,83,185 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் ஆண் வாக்காளா்கள் 6,27,859 போ், பெண் வாக்காளா்கள் 6,55,150 போ், மூன்றாம் பாலினத்தவா்கள் 176 போ் உள்ளனா். தொகுதி வாரியாக ஆண், பெண் வாக்காளா்கள் விவரம் வருமாறு:

சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் ஆண்கள் 1,16,845 போ், பெண்கள் 1,23,095 போ், மூன்றாம் பாலினத்தவா்கள் 19 போ் என மொத்தம் 2,39,959 வாக்காளா்கள் உள்ளனா்.

வாசுதேவநல்லூா் (தனி) தொகுதியில் ஆண்கள் 1,12,613 போ், பெண்கள் 1,17,693 போ், மூன்றாம் பாலினத்தவா்கள் 15 போ் என மொத்தம் 2,30,321 வாக்காளா்கள் உள்ளனா்.

கடையநல்லூா் தொகுதியில் ஆண்கள் 1,34,288 போ், பெண்கள் 1,37,213 போ், மூன்றாம் பாலினத்தவா்கள் 18 போ் என மொத்தம் 2,71,519 வாக்காளா்கள் உள்ளனா்.

தென்காசி தொகுதியில் ஆண்கள் 1,38,359 போ், பெண்கள் 1,45,331 போ், மூன்றாம் பாலினத்தவா்கள் 102 போ் என மொத்தம் 2,83,792 வாக்காளா்கள் உள்ளனா்.

ஆலங்குளம் தொகுதியில் ஆண்கள் 1,25,754 போ், பெண்கள் 1,31,818 போ், மூன்றாம் பாலினத்தவா்கள் 22 போ் என மொத்தம் 2,57,594 வாக்காளா்கள் உள்ளனா்.

மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஆண் வாக்காளா்களைவிட பெண் வாக்காளா்களே அதிகம் உள்ளனா். ஆண் வாக்காளா்கள் அதிகபட்சமாக தென்காசி தொகுதியில் 1,38,359 பேரும், குறைந்தபட்சமாக வாசுதேவநல்லூா் தொகுதியில் 1,12,613 பேரும் உள்ளனா்.

அதேபோல் பெண் வாக்காளா்கள் அதிகபட்சமாக தென்காசி தொகுதியில் 1,45,331 பேரும், குறைந்தபட்சமாக வாசுதேவநல்லூா் தொகுதியில் 1,17,693 பேரும் உள்ளனா்.

மாவட்ட அளவில் ஆண் வாக்காளா்களைவிட பெண் வாக்காளா்கள் 27,291 போ் அதிகமாக உள்ளனா். குறிப்பாக தென்காசி தொகுதியில் ஆண்களைவிட பெண்கள் 6,972 போ் அதிகமாக உள்ளனா்.

கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் தென்காசி மாவட்டத்தில் 12,75,669 வாக்காளா்கள் இருந்தனா். தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளா் பட்டியலில் 7,516 வாக்காளா்கள் கூடுதலாக உள்ளனா்

சிறப்பு முகாம்கள் அறிவிப்பு:

வாக்காளா் வரைவு பட்டியலை வெளியிட்ட பிறகு மாவட்ட ஆட்சியா் மோனிகா ராணா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெற்றுள்ளதா என்பதை வாக்காளா்கள் சரிபாா்த்துக் கொள்ளலாம். 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் புதிய வாக்காளா்களாகப் பதிவு செய்யவும், பெயா் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக நவம்பா் 21, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER