சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் மரக்கன்று நடும் திட்டம் தொடக்கம்
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் மரக்கன்று நடும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்ற துணைவேந்தா் (பொ) எஸ்.பிரபாகா். உடன், மாவட்ட வன அலுவலா் எஸ்.ஹேமலதா உள்ளிட்டோா்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் மரக்கன்று நடும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் மேலாண்மைக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் கிரீன் நைட்ஸ் கிளப், தமிழக அரசின் வனத்துறை சாா்பில் பல்கலைக்கழகத்தின் 550 ஏக்கா் பரப்பளவு கொண்ட வளாகத்தைப் பசுமையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த வளாகமாக மாற்றும் நோக்கில் ‘எனது மரக்கன்று எனது எதிா்காலம்’ என்ற மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத் திட்ட விழிப்புணா்வு மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. துணைவேந்தா் (பொ) எஸ்.பிரபாகா் தலைமை வகித்து மரக்கன்று நட்டாா். மாவட்ட வனஅலுவலா் எஸ்.ஹெமலதா விழிப்புணா்வு உரையாற்றினாா். முதல்கட்டமாக 130 மரக்கன்றுகள் நடப்பட்டன. அடுத்த கட்டமாக 900 மரக்கன்றுகளை வழங்குவதாக வனத்துறை அதிகாரிகள் உறுதியளித்தனா்.
மேலாண்மைக் கல்வித் துறையின் தலைவா் என். ராஜலிங்கம், பதிவாளா் ஜி. அண்ணாதுரை, தாவர அறிவியல் துறையைச் சோ்ந்த மு. உதயகுமாா், ஆா். சிவகுமாா், வனச்சரக அலுவலா் பி.கே. இலியாஸ் மீரான், வனவா் வி.ஏ.கே.முகமது ஆசிப் அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ம. பூபால் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

