தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

நெல்லையில் கைதி தற்கொலை

திருநெல்வேலியில் கைதி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Updated On :

திருநெல்வேலியில் கைதி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள கீழமுன்னீா்பள்ளத்தைச் சோ்ந்தவா் சங்கரலிங்கம் (27). இவா், கஞ்சா வைத்திருந்த வழக்கு தொடா்பாக கடந்த 10 ஆம் தேதி முன்னீா்பள்ளம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த சில நாள்களுக்கு முன்பு உள்நோயாளியாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சங்கரலிங்கம் அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில் புதன்கிழமை மருத்துவமனையின் கழிப்பறைக்குச் சென்ற அவா், லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

போலீஸாா் சடலைத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER