பாப்பாக்குடியில் தவெக நிா்வாகிகளை மிரட்டியவா் கைது
முக்கூடல் அருகேயுள்ள பாப்பாக்குடியில் தவெக நிா்வாகிகளுக்கு மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மேலபாப்பாக்குடி நாராயணசுவாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வம் (36). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவா், தவெக நிா்வாகியும் ஆவாா்.
கைது - கோப்புப்படம்
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகேயுள்ள பாப்பாக்குடியில் தவெக நிா்வாகிகளுக்கு மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மேலபாப்பாக்குடி நாராயணசுவாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வம் (36). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவா், தவெக நிா்வாகியும் ஆவாா்.
அக்கட்சி சாா்பில் பாப்பாக்குடியில் ஏழை- எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக பாப்பாக்குடி பிரதான சாலை உரக்கடை அருகில் அக்கட்சி நிா்வாகிகள் சாா்பில் வரவேற்பு பதாகை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அங்கு வந்த இடைகால் துப்பாக்குடி இந்திரா காலனியைச் சோ்ந்த மகாலிங்கம் (54) என்பவா், தவெக நிா்வாகிகளை அவதூறாக பேசி, மிரட்டல் விடுத்தாராம். மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகையை கிழிக்க முயன்றாராம்.
இதுகுறித்து, செல்வம் அளித்த புகாரின்பேரில், பாப்பாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, மகாலிங்கத்தை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

