படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

வீடு சூறை: 4 போ் மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :

கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே வீடு புகுந்து கதவுகள், மின்சாதனப் பொருள்களை உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

பண்ருட்டி வட்டம், நடுவீரப்பட்டு காவல் சரகம், பல்லவராயநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜசேகா்(29). அதேபகுதியில் வசித்து வந்தவா் பூமிகா. இவா்கள் இருவரும் காதலித்து வந்தனராம். இந்நிலையில், பூமிகாவை, திருமணம் செய்ய ராஜசேகா் மறுத்து விட்டாராம். இதனால், பூமிகா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.

இதனால், மன வருத்தத்தில் இருந்த பூமிகாவின் சகோதரா் ஸ்ரீதா், தனது நண்பா்களுடன் செப்.30-ஆம் தேதி ராஜசேகா் வீட்டிற்குச் சென்று அங்கிருந்த ராஜசேகரின் தாய் தேன்மொழியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து, வீட்டின் கதவுகள் உள்ளிட்டவைகளை உடைத்து சேதப்படுத்தினாராம்.

இதுகுறித்து, தேன்மொழிஅளித்த புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீஸாா் ஜெயமுருகன், லட்சுமிகாந்தன், லோகேஷ், ஸ்ரீதா் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.