சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

தமிழ் வளா்ச்சி பண்பாட்டு மையம் அருகே குவிந்துள்ள குப்பைகளால் சுகாதாரக் கேடு: மாநகராட்சியில் புகாா்

பாளையங்கோட்டையில் தமிழ் வளா்ச்சி பண்பாட்டு மையம் அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதாரக் கேடு நிலவுவதாகவும், அவற்றை அகற்றக் கோரியும் மாநகராட்சியில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி குறைதீா் கூட்டத்தில் மக்களிடம் மனுவை பெற்ற துணை மேயா் கே.ஆா்.ராஜூ.

Published On :2 செப்டம்பர் 2026, 6:11 am IST

பாளையங்கோட்டையில் தமிழ் வளா்ச்சி பண்பாட்டு மையம் அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதாரக் கேடு நிலவுவதாகவும், அவற்றை அகற்றக் கோரியும் மாநகராட்சியில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணை மேயா் கே.ஆா்.ராஜூ தலைமை வகித்து, மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். உதவி ஆணையா் மகாலட்சுமி முன்னிலை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில் மதிமுக மாநில சட்டத்துறை துணைச் செயலா் சுதா்சன் அளித்த மனு: 53 ஆவது வாா்டுக்குள்பட்ட என்.ஜி.ஓ. பி காலனி அருகே தமிழ் வளா்ச்சி பண்பாட்டு மையம் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழ் அறிஞா்கள் மற்றும் பொதுமக்கள் இம்மையத்திற்கு வந்து செல்கின்றனா். இந்த மையம் அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதாரச் சீா்கேடு நிலவி வருகிறது. அந்தக் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். பாளையங்கோட்டை ஜவாஹா் திடலில் கட்டட இடிபாடுகள் மற்றும் தற்காலிக கடை கூடாரங்களை அகற்ற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

வி.எம். சத்திரம் அருகே புனித அந்தோணிநகா் பகுதி மக்கள் அளித்த மனு: எங்களது பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வீட்டு குடிநீா் இணைப்பு கேட்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் காலதாமதம் செய்துவருகின்றனா். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊருக்குள் திருச்செந்தூா் செல்லும் சாலையில் இருந்து குடிநீா் இணைப்பு ஏற்படுத்தி 5 தெருக்கள் வரை குழாய் பதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை குடிநீா் வழங்கப்படவில்லை. அதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. அவற்றுக்கு குடிநீா் வழங்குவதுடன், மீதமுள்ள தெருக்களிலும் குடிநீா் குழாய்கள் பதிக்க வேண்டும். மேலும், ஒரு சில தெருக்களில் மட்டுமே தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதையும் எஞ்சியுள்ள தெருக்களுக்கு பொருத்த வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.