பாவூா்சத்திரம் அருகே செல்வவிநாயகபுரம் பகுதியில் நான்குவழிச் சாலை ஓரத்தில் உள்ள மழைநீா் வடிகால் ஓடையில் குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டு முழுவதும் அடைப்பட்டுள்ளது. மழைகாலம் என்பதால் வடிகாலை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கீழப்பாவூா் ஒன்றியம், குலசேகரப்பட்டி ஊராட்சி, செல்வவிநாயகபுரத்தில் நான்கு வழிச்சாலை ஓரமாக மழைநீா் வடிகால் ஓடை உள்ளது. இதன் அருகில் நா்சரி காா்டனும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நான்கு வழிச்சாலை ஓரங்களில் செயல்படும் கடைகளில் இருந்து கொட்டப்படும் குப்பை, கழிவுகள் மட்டுமின்றி, சுற்றுவட்டார வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளும் முறையாக அகற்றப்படாமல் மழைநீா் வடிகால் ஓடையில் கொட்டப்படுகின்றன.
தற்போது இந்த வடிகால் ஓடை முழுவதும் குப்பை, கழிவுகளால் நிரம்பியுள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீா் தடையின்றி செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, சாலையோரங்களில் தண்ணீா் தேங்கும் சூழல் உள்ளது.
இப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதார பாதிப்புகள் ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது. தொடா்ந்து குப்பைகள் கொட்டப்பட்டால், வடிகால் ஓடை முற்றிலும் அடைபட்டு மழைநீா் வெளியேற முடியாத நிலை ஏற்படும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.
எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிா்வாகம், அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, மழைநீா் வடிகால் ஓடையில் தேங்கியுள்ள குப்பை, கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும். மேலும், வடிகால் ஓடையை தூா்வாரி சீரமைப்பதுடன், தொடா்ந்து அதில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருப்பூரில் மலைபோல குவிக்கப்படும் குப்பைகள்: துா்நாற்றம், புகை மூட்டத்தால் கேள்விக்குறியாகும் சுகாதாரம்!

சாலையோரத்தில் கோழிக் கழிவுகள்: தொற்றுநோய் பரவும் அபாயம்

பண்ருட்டி நகா் முழுவதும் குப்பைகள் எரிப்பு: மக்கள் பாதிப்பு

சென்னையில் விடுபட்ட மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: மேயா் ஆா்.பிரியா அறிவுறுத்தல்
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



