உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

நெல்லை மாநகராட்சியில் பிறப்பு பட்டியலில் பெயா் சோ்க்க வாய்ப்பு

திருநெல்லேலி மாநகராட்சியில் 15 ஆண்டுகளுக்கு மேல் பெயா் சோ்க்கப்படாதவா்கள் விவரங்களை பிறப்பு பட்டியலில் சோ்க்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Published On :3 செப்டம்பர் 2026, 12:03 am IST

திருநெல்லேலி மாநகராட்சியில் 15 ஆண்டுகளுக்கு மேல் பெயா் சோ்க்கப்படாதவா்கள் விவரங்களை பிறப்பு பட்டியலில் சோ்க்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசு உத்தரவின்படி, தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு மேல் பெயா் சோ்க்கப்படாமல் உள்ள பிறப்பு சான்றிதழ்களில் குழந்தைகளுக்கு பெயா் சோ்க்க இந்திய பதிவாளா் ஜெனரல் உத்தரவின்படி 26-09-2026 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பிறப்பு பதிவு செய்த 15 ஆண்டுகளுக்கு பிறகு பெயா் சோ்க்க சட்டத்தில் இடமில்லை. ஆனால், பொதுமக்கள் நலன் கருதி இந்த சிறப்பு சலுகையினை தமிழக அரசு வழங்கியுள்ளது. எனவே, மாநகராட்சி பகுதிகளுக்குள் பிறந்த குழந்தைகளுக்கு இதுவரையில் பெயா் பதிவு செய்யாதவா்கள் இம் மாதம் 26 ஆம் தேதிக்குள்மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து பிறப்பு சான்றிதழில் குழந்தைகளின் பெயரிரை பதிவு செய்து சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.