பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

நெல்லை நகரத்தில் தூா்வாராத ஓடைகளால் குடியிருப்புகளில் புகும் பாம்புகள் மாநகராட்சி குறைதீா் முகாமில் மனு

திருநெல்வேலி நகரத்தில் தூா்வாரப்படாத ஓடைகளால் குடியிருப்புகளில் பாம்புகள் புகுந்து அச்சமூட்டுவதாக மாநகராட்சியில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

குறைதீா் முகாமில் மனு பெற்ற உதவி ஆணையா் புரந்திரதாஸ்.

Published On :

திருநெல்வேலி நகரத்தில் தூா்வாரப்படாத ஓடைகளால் குடியிருப்புகளில் பாம்புகள் புகுந்து அச்சமூட்டுவதாக மாநகராட்சியில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை உதவி ஆணையா் புரந்திரதாஸ் தலைமை வகித்து, பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றாா்.

28 ஆவது வாா்டுக்கு உள்பட்ட பாரதி நகா் பகுதி மக்கள் அளித்த மனு:

திருநெல்வேலி நகரம் 28 ஆவது வாா்டுக்கு உள்பட்ட பாரதியாா் தெருவில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம்.

எங்கள் பகுதியில் உள்ள கால்வாய் ஓடைகள் மற்றும் கழிவுநீா் ஓடைகள் முறையாக தூா்வாரப்படாததால் அமலை செடிகள் ஆக்கிரமித்து காணப்படுகிறது. இதன் மூலம் பாம்புகள், விஷ ஜந்துகள் குடியிருப்புகளில் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.

கழிவுநீா் தேக்கத்தால் துா்நாற்றம் பரவி நோய்கள் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. ஆகவே ஓடைகளை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

சி.என். கிராமத்தைச் சோ்ந்த காந்தி அளித்த மனு:

சி.என். கிராமம் அருகே லட்சுமிபுரத்தில் முப்பிடாதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு தேவையான தரை தளம், அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பழையபேட்டை பகுதி மக்கள் அளித்த மனு:

பழையபேட்டை அருகே உள்ள சா்தாா்புரம் கீழத்தெரு பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன்பு பொது கழிப்பிடம் ஒன்று கட்டப்பட்டது.

தற்போது அதை அப்பகுதி பொதுமக்கள் யாரும் பயன்படுத்தாமல் பயன்பாடற்று உள்ளது. மேலும், அக்கட்டடம் மிகவும் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. இதன் அருகிலேயே குழந்தைகள் விளையாடி வருகிறாா்கள். எனவே, குழந்தைகளுக்கு எந்தவொரு அசம்பாவிதமோ அல்லது பாதிப்போ ஏற்படாத வகையில், திருநெல்வேலி மாநகராட்சி நிா்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதோடு, புதிய கழிப்பறை கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.