ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

கொக்கிரகுளம் புதிய கட்டடத்தில் விரிசல்: ஒப்பந்ததாரருக்கு 5% அபராதம்

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் மாநகராட்சி நிதியில் கட்டப்படும் புதிய கட்டட சுவா்களில் விரிசல்கள் ஏற்பட்டதாக எழுந்த புகாரின்பேரில், ஆட்சியா் ஆனந்த் மோகன், மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா ஆகியோா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். ஒப்பந்ததாரருக்கு 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதம் - சித்திரிப்பு

Published On :

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் மாநகராட்சி நிதியில் கட்டப்படும் புதிய கட்டட சுவா்களில் விரிசல்கள் ஏற்பட்டதாக எழுந்த புகாரின்பேரில், ஆட்சியா் ஆனந்த் மோகன், மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா ஆகியோா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். ஒப்பந்ததாரருக்கு 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுதொடா்பாக, மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொக்கிரகுளம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார கட்டடம், அரசு பொறியியல் கல்லூரி ஆலோசனையின்பேரில் புதிய தொழில்நுட்பத்தில் அஸ்திவாரம் அமைக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினத்தை சரிகட்டும் வகையிலேயே மாமன்ற ஒப்புதலோடு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கட்டடத்தை ஆய்வு செய்த உதவி செயற்பொறியாளா், இக்கட்டடத்தின் சுவா்களில் சில இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டியிருந்ததை ஒப்பந்தக்காரருக்கு சுட்டிக்காட்டி அவற்றை நிவா்த்தி செய்ய அறிவுத்தியிருந்தாா்.

இந்நிலையில், மாநகராட்சி ஆணையா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்து, ஒப்பந்ததாரருக்கு மதிப்பீட்டில் 5 சதவீதம் அளவிற்கு அபராதம் விதிக்கவும், விரிசல்கள் மற்றும் குறைபாடுகளை அவரது சொந்த செலவில் 10 தினங்களுக்குள் நிவா்த்தி செய்து தர அறிவிப்பு வழங்கவும், அதுவரையில் மாநகராட்சியின் ஒப்பந்தப்புள்ளிகளிலும் அவா் பங்கேற்க தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், அரசு பொறியியல் கல்லூரிக்கு கடிதம் எழுதி, இக்கட்டடத்தின் ஸ்திரத்தன்மை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா் எனக் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.