கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருச்செந்தூர் முருகன் கோவிலில் திருப்பாவை-திருவெம்பாவை

:திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், திருப்பாவை-திருவெம்பாவை போட்டிகள் நடைபெற்றன.

News image
Updated On :5 ஜனவரி 2013, 8:32 pm

தினமணி

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், திருப்பாவை-திருவெம்பாவை போட்டிகள் நடைபெற்றன.

திருக்கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன் தலைமை வகித்தார். திருக்கோவில் இணை ஆணையர் அர.சுதர்சன் போட்டியைத் தொடங்கி வைத்தார்.

திருச்செந்தூர் வட்டாரத்திலுள்ள இந்து தொடக்கப் பள்ளி, ஸ்ரீ சரவணய்யர் நடுநிலைப் பள்ளி, செந்தில்குமரன் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளிட்ட பல பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். நடுவர்களாக தமிழாசிரியர்கள் புலவர் கோபால், குலசை முத்தரசு, வேலாண்டி ஓதுவார் ஆகியோர் செயல்பட்டனர்.

திருக்கோவில் பணியாளர்கள் மகாமுனி, தியாகராஜன், வெங்கடேஷ், விடுதி மேலாளர் சிவநாதன், கருணை இல்ல காப்பாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு இம்மாதம் 8-ம் தேதியன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.