ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ராமதாஸுக்கு தடை விதிக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிப்பு

தூத்துக்குடிக்கு புதன்கிழமை (ஜனவரி 30) வரும் பாமக நிறுவனர் மருத்துவர்ராமதாஸுக்கு தடை விதிக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனுஅளிக்கப்பட்டது

News image
Updated On :29 ஜனவரி 2013, 3:16 pm

INBARAJ

தூத்துக்குடிக்கு புதன்கிழமை (ஜனவரி 30) வரும் பாமக நிறுவனர் மருத்துவர்ராமதாஸுக்கு தடை விதிக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனுஅளிக்கப்பட்டது.தூத்துக்குடியில் புதன்கிழமை (ஜனவரி 30) மாலை 4 மணிக்கு நடைபெறும்அனைத்து சமுதாய ஆலோசணை கூட்டத்தில் பங்கேற்க பாட்டாளி மக்கள் கட்சிநிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தலைவர் கோ.க. மணி, வண்ணியர் சங்கத் தலைவர்காடுவெட்டி குரு ஆகியோர் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கமருத்துவர் ராமதாஸுக்கு தடைவிதிக்க வேண்டும் என ஜாதி மறுப்புஇயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகர்தலைமையில் மாவட்ட ஆட்சியரிம் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில்,  தூத்துக்குடி மாவட்டம் தற்போது அமைதி பூங்காவாக உள்ளது.மாவட்டத்தில் ராமதாஸ் கூட்டம் நடத்தினால் மீண்டும் ஜாதி கலவரத்தைதூண்டிவிடும் நிலை உருவாகிவிடும். இதனால், மதுரை, கடலூர் மாவட்டங்களில்ராமதாஸ் நுழைய தடை விதித்தது போல தூத்துக்குடி மாவட்டத்திலும் தடைவிதிக்கவேண்டும். மேலும், இந்த எதிர்ப்பையும் மீறி கூட்டம் நடத்தினால் கண்டனஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.