ராமதாஸுக்கு தடை விதிக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிப்பு
தூத்துக்குடிக்கு புதன்கிழமை (ஜனவரி 30) வரும் பாமக நிறுவனர் மருத்துவர்ராமதாஸுக்கு தடை விதிக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனுஅளிக்கப்பட்டது


தூத்துக்குடிக்கு புதன்கிழமை (ஜனவரி 30) வரும் பாமக நிறுவனர் மருத்துவர்ராமதாஸுக்கு தடை விதிக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனுஅளிக்கப்பட்டது.தூத்துக்குடியில் புதன்கிழமை (ஜனவரி 30) மாலை 4 மணிக்கு நடைபெறும்அனைத்து சமுதாய ஆலோசணை கூட்டத்தில் பங்கேற்க பாட்டாளி மக்கள் கட்சிநிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தலைவர் கோ.க. மணி, வண்ணியர் சங்கத் தலைவர்காடுவெட்டி குரு ஆகியோர் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கமருத்துவர் ராமதாஸுக்கு தடைவிதிக்க வேண்டும் என ஜாதி மறுப்புஇயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகர்தலைமையில் மாவட்ட ஆட்சியரிம் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், தூத்துக்குடி மாவட்டம் தற்போது அமைதி பூங்காவாக உள்ளது.மாவட்டத்தில் ராமதாஸ் கூட்டம் நடத்தினால் மீண்டும் ஜாதி கலவரத்தைதூண்டிவிடும் நிலை உருவாகிவிடும். இதனால், மதுரை, கடலூர் மாவட்டங்களில்ராமதாஸ் நுழைய தடை விதித்தது போல தூத்துக்குடி மாவட்டத்திலும் தடைவிதிக்கவேண்டும். மேலும், இந்த எதிர்ப்பையும் மீறி கூட்டம் நடத்தினால் கண்டனஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...