ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

இந்து முன்னணி செயற்குழுக் கூட்டம்

திருச்செந்தூரில் இந்து முன்னணி தெற்கு ஒன்றிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

Updated On :13 மே 2013, 2:02 am IST

திருச்செந்தூரில் இந்து முன்னணி தெற்கு ஒன்றிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவர் ஜெயசிங் தலைமை வகித்தார். ஒன்றியச்செயலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாவட்ட பொதுச்செயலர் பெ.சக்திவேலன், நகரத்தலைவர் அரிகிருஷ்ணன், துணைத் தலைவர் விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருக்கோவில் நாழிக்கிணறு பேருந்து நிலையத்தில், பக்தர்கள் வசதிக்காக கூடுதல் குடிநீர்த்தொட்டி அமைக்க வேண்டும். திருச்செந்தூர் கோவில் கடலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். திருக்கோவில் பணியாளர்களும், அர்ச்சகர்களும் ஒற்றுமையாக செயல்பட்டு, கோவிலின் புனிதத்தைக் காக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர பொதுச்செயலர் முத்துராஜ் வரவேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.