:இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை பொதுக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் நகரத் தலைவர் கே.எஸ்.முஹம்மத் நாஸர் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பி.மீராசா மரைக்காயர் மற்றும் மாவட்டச் செயலர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். எஸ்.எல்.ஷெய்கு அப்துல் காதிர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
கட்சியின் மாணவரணி மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்ராஹீம், மாணவரணி நகர அமைப்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், நகர துணைச் செயலர்களான எம்.எல்.முஹம்மத் முஹ்யித்தீன் மற்றும் எம்.எல்.ஷேக்னா லெப்பை ஆகியோர் உரையாற்றினர்.
கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச்செயலர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேசினார்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகரச் செயலர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








