சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல்! தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை! இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவு!காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான்: இந்தியா விமா்சனம்பிரான்ஸில் தீவிர போராட்டம்: 4 லட்சம் போ் பங்கேற்பு! கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு! பிரேஸில் அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!அமெரிக்க இடைத்தோ்தல் பரப்புரை: ஆபரேஷன் சிந்தூா் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப்

அடிப்படை வசதியின்றி கோவில்பட்டி அரசு ஊழியர் குடியிருப்பு

கோவில்பட்டியில் சேதமடைந்த நிலையில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பை புதுப்பித்து, அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :

கோவில்பட்டியில் சேதமடைந்த நிலையில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பை புதுப்பித்து, அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலமாக 1978இல் கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் அரசு ஊழியர் குடியிருப்பு கட்டப்பட்டது. இங்கு 30 வீடுகள் உள்ளன. இதில் 26 வீடுகளில் சுமார் 120  பேர் வசித்து வருகின்றனர். இவ் வளாகத்தில் சீவலப்பேரி குடிநீர் இணைப்புகள் நான்கு உள்ளன. சுமார் 12முதல் 15நாள்களுக்கு ஒருமுறை தரைமட்ட குடிநீர்த் தொட்டியில் சேமிக்கப்பட்டு, பின்னர் குடியிருப்பில் உள்ளோருக்கு விநியோகிக்கப்படுகிறது.

தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் குடிநீர்த் தொட்டிகள் சில ஆண்டுகளாகவே சுத்தம் செய்யப்படாமல் உள்ளதால், இந்த குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் லாரிகள் மூலம் வரும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. மேலும், குடிநீர் பயன்பாட்டுக்கு என தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளும் பழுதடைந்த நிலையில் உள்ளன.  இக் குடியிருப்பு பகுதியில் தெற்கு, வடக்குப் பகுதிகளில் சுற்றுச்சுவர் இல்லாததால் வாகனங்கள் அடிக்கடி திருடு போகின்றன.

குடியிருப்புக் கட்டடங்கள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி, பெரும்பாலான வீடுகள் மிகவும் பழுதடைந்த நிலையிலே இருந்து வருகிறது. வளாகத்தில் பன்றிகள் உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித் திரிவதாலும், சாலை வசதி, கழிவுநீர் ஓடை வசதி இல்லாததால் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகிவருவதாலும், சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. வளாகத்தில் 2 மின்கம்பங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் ஜெயமீனா கூறியது: வீட்டு வசதி வாரியம் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதந்து குடியிருப்புகளை தரமான முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிறைவேற்றத் தவறினால், இங்கு குடியிருப்போர் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபடவுள்ளோம் என்றார்.

சுப்புராஜ் கூறியது: எவ்வித பாதுகாப்பும், அடிப்படை வசதியுமின்றி வசித்து வருகிறோம். வளாகம் அருகே கழிவுநீர் ஓடை செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இங்கு போதுமான குடிநீர் வசதி மற்றும் புழக்கத்துக்கு உண்டான நிலத்தடி நீரும் கிடைப்பதற்கு வீட்டு வசதி வாரியம் ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க மாவட்ட  நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.