தூத்துக்குடியில் 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து கேரளத்துக்கு கடந்த முயன்ற 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில் இருந்து கேரளத்துக்கு கடந்த முயன்ற 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகேயுள்ள ராஜபாளையம் கடற்கரைப் பகுதியில் சிலர் ரேஷன் அரிசி கடத்துவதாக தாளமுத்துநகர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரோந்து போலீஸார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிலர் ஒரு சுமை ஆட்டோவில் இருந்து, அரிசி மூட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீஸாரைக் கண்டதும் அவர்கள் தப்பியோடிவிட்டனர். அங்கு போலீஸார் மேற்கொண்ட சோதனையில், 50 கிலோ எடை கொண்ட 60 மூட்டை ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அரிசி மற்றும் லாரி, சுமை ஆட்டோ ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மேலும், இதுதொடர்பாக கேரள மாநிலம் எரிமேலி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சசிகுமாரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

