உத்தரப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக!மருத்துவத்துக்கான நோபல் பரிசு: மூவருக்குப் பகிர்ந்தளிப்பு!நாளை முதல் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை உயர்த்தும் இண்டிகோ! எஸ்ஐஆர் விவகாரம்: ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்ய உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு!சென்னை பூங்காவிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் இயக்கம்!ஜூலையிலேயே சதி! கட்டடம் அல்லது விமானத்தின் மீது மோத திட்டம்! ப்ளைதுபை துணை விமானி வாக்குமூலம்பிளேக் தொற்றுக்கு பலியான ரஷிய ஆய்வாளர்! ஆய்வக குழாய் வெடித்து பரவியதா? அதிர்ச்சித் தகவல்பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத்தை எதிர்த்த வழக்கு வாபஸ்!திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! 2006 கேரள லஞ்ச முறைகேடு வழக்கு! குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு

எட்டயபுரம்,குளத்தூரை புதிய ஊராட்சி ஒன்றியங்களாக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் மற்றும் குளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Published On :

தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் மற்றும் குளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம் தூத்துக்குடி அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராகவன் தலைமை வகித்தார். செயலர் பார்த்தசாரதி, பொருளாளர் அன்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் சுமதி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்துப் பேசினார். அரசு ஊழியர் சங்க தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி, செயலர் வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

கூட்டத்தின்போது, ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விடுமுறை தினங்களில் கள ஆய்வு மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். எட்டயபுரம், குளத்தூர் ஆகியவற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்பட  வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.