பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

கோவில்பட்டி அஞ்சலகத்தில் ஏ.டி.எம். மையம் திறப்பு

கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஏ.டி.எம். மையத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஏ.டி.எம். மையத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர் ராமசாமி தலைமை வகித்தார்.  ஏ.டி.எம். மையத்தை கோவில்பட்டி எம்.எல்.ஏ. கடம்பூர் செ.ராஜு திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினார். கோட்டாட்சியர் கண்ணபிரான், மத்திய கலால் துறை  உதவி ஆணையர் உத்தண்டு மல்லையன், இந்திய மருத்துவர் சங்க கோவில்பட்டி கிளைத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், மருத்துவர் ஸ்ரீவெங்கடேஷ், அஞ்சலக உதவி கண்காணிப்பாளர்கள் ஜெயராயம்மாள் உள்பட அஞ்சலக ஊழியர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். அஞ்சலக உதவி கண்காணிப்பாளர் கண்ணபிரான் நன்றி கூறினார்.

அஞ்சலகத்தில் குறைந்தபட்சம் ரூ.50 இருப்புத் தொகை உள்ள சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம். அட்டை வழங்கப்படுகிறது. கோவில்பட்டி கோட்டத்தில் 7 லட்சம் அஞ்சலக சேமிப்பு கணக்குகள் உள்ளன. அதில்,  23 ஆயிரம் பேர் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் இணைந்துள்ளனர் என கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.