எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள்  காத்திருக்கும் போராட்டம்

பிஎஸ்என்எல்   ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்தை, பிரதி மாதம் 7ஆம் தேதி வழங்க வலியுறுத்தி தூத்துக்குடியில் உள்ள

News image
Updated On :28 டிசம்பர் 2017, 11:27 pm

DIN

பிஎஸ்என்எல்   ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்தை, பிரதி மாதம் 7ஆம் தேதி வழங்க வலியுறுத்தி தூத்துக்குடியில் உள்ள பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் ஒப்பந்த ஊழியர்கள் காத்திருக்கும் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினர்.
பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம்,  தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் ஆகியன சார்பில் நடைபெற்று வரும் இப்போராட்டத்துக்கு, ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.
பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலர் ஜெயமுருகன்,  மாநில உதவிச் செயலர் கிறிஸ்டோபர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.