விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

எட்டயபுரத்தில் கட்டுமான  தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கட்டுமான தொழிலுக்கு தேவையான மணலை முறையாக கிடைக்க ஆவண செய்ய வேண்டும். ஆற்று மணலுக்கு மாற்றாக உள்ள எம்.சாண்ட் மணல்

News image
Updated On :28 டிசம்பர் 2017, 11:27 pm

DIN

கட்டுமான தொழிலுக்கு தேவையான மணலை முறையாக கிடைக்க ஆவண செய்ய வேண்டும். ஆற்று மணலுக்கு மாற்றாக உள்ள எம்.சாண்ட் மணல் உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்யவும் மத்திய, மாநில அரசுகள் முனைப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. கட்டுமான தொழிற்சங்கம் சார்பில் எட்டயபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 செயலர் குருநாதன் தலைமை வகித்தார். துணைச் செயலர்கள் ஆவுடையப்பன், மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கடந்த ஒர் ஆண்டாக தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு இருந்து வருகிறது. வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் கட்டுமானப் பணிகளுக்கு உள்ளுர் தொழிலாளர்களுக்கு 80 சதவீத வேலைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். கட்டுமான தொழிலாளர் நலவாரிய பலன்கள் தொழிலாளர்களுக்கு தாமதமின்றி கிடைத்திட சட்ட நடைமுறைகளையும், விதிகளையும் எளிமைப்படுத்த வேண்டும் என்பன  உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் நல்லையா, கிருஷ்ணமூர்த்தி, ரவீந்திரன், சேது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.