குலசேகரன்பட்டினம் அருள்தரும் அறம் வளர்த்த நாயகி அம்மன் திருக்கோயில் மற்றும் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுடன் இணைந்த புராதன பெருமைகள் பல கொண்ட குலசேகரன்பட்டினம் அருள்தரும் அறம் வளர்த்த நாயகி உடனுறை அருள்மிகு காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டு தோறும் 12 நாள்கள் நடைபெறு ம் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா நிகழாண்டில் வியாழக்கிழமை கொடியேற்றத்துட ன் தொடங்கியது. இதையொட்டி அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. காலை 6 மணிக்கு கொடியேற்றத்தைத் தொடர்ந்து கொடிமரம்,பலி பீடம்,நந்தியம்பெருமாளுக்கு பல்வேறு வகையான பொருள்களால் அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற் றது. மாலை 6.30 மணிக்கு அப்பர் சுவாமிகள் திருவீதிகளில் உழவாரப்பணி , ஆவாகனச் சீவிலி ரிஷப வாகனத் தில் ஸ்ரீபலிநாதர் திருவீதியுலா ஆகியவை நடைபெற்றது. இரவு 8.30 மணிக்கு அம்மன் பூங்கோயில் சப்பரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா நாள்களில் தினமும் காலை மற்றும் இரவில் அம்மன் கேடயம், காமதேனு ,சிங்கம், ரிஷபம், பூங்கோயில், அன்னம், மின் அங்கார சப்பரம், கிளி, பல்லாக்கு சப்பரத்தில் திருவீதியுலா நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நவ.11 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு திருப்பொற்சுன்னம் இடித்தல் வைபவம் நடைபெறும். நவ,12 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாணக் காப்பு கட்டுதல், நவ.13 ஆம் தேதி காலையில் அம்மன் தவசுக்கு எழுந்தருளல், மாலையில் சுவாமி காட்சி கொடுக்க ரிஷப வாகனத்தில் எழு ந்தருளல், நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் பல்லக்கில் கதிர் குளிப்புக்கு எழுந்தருளல் ஆகியவை நடைபெறும்.
திருக்கல்யாணம்: நவ.14 ஆம் தேதி காலை 6 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். தொடர்ந்து திருக்கல்யாண கோலத்தில் சுவாமி- அம்மன் பட்டினப்பிரவேசம் நடைபெறும்.
விழா நாள்களில் தினமும் மாலை 6 மணிக்கு சிவனடியார்கள் ஆ.இல்லங்குடி, சிவானந்த நடராஜன்,ரமணகிரி ஆகியோரின் தேவாரப் பண்ணிசை,சமய சொற்பொ ழிவுகள் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் பா.பாரதி மற்றும் அலயப் பணியாளர்கள் செய்துள்ளனர்.
கோவில்பட்டி: கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றத்தையொட்டி வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருவனந்தல் பூஜை மற்றும் சுவாமி, அம்மன், பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை ஆகியன நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து, கொடிப்பட்டம் வீதிகளில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையைத் தொடர்ந்து, காலை 5.45 மணிக்கு கொடியேற்றப்பட்டது. பின்னர், நந்தி, பலிபீடம் மற்றும் கொடிமரம் ஆகியவற்றிற்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு புஷ்ப சப்பரத்தில் அம்மன் திருவீதியுலா நடைபெற்றது.
தேரோட்டம்: விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 9ஆம் திருநாளான நவ.10 ஆம் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். 13ஆம் தேதி காலை 8 மணிக்கு அம்மன் பல்லக்கில் வீதியுலா, இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் ஆகியன நடைபெறுகின்றன. பின்னர், சுவாமி யானை வாகனத்திலும், அம்மன் பல்லக்கிலும் பட்டணப்பிரவேசம் நடைபெறுகிறது. திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து காயத்ரி மண்டபத்தில் அன்னதானம் நடைபெறும்.
கொடியேற்ற நிகழ்ச்சியில் திருக்கோயில் நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியராஜன், மண்டகப்படிதாரர்களான பிராமணாள் சங்கத் தலைவர் நாகராஜன், உதவித் தலைவர் கனகசபாபதி, செயலர் ராதாகிருஷ்ணன், ஜனக் கல்யாண் அமைப்பாளர் திருப்பதிராஜா, தொழிலதிபர் திலகராஜ் ஆறுமுகச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.