கோவில்பட்டி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
கோவில்பட்டி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.


கோவில்பட்டி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.
அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த அருள்மிகு ஸ்ரீதேவி - நீலாதேவி உடனுறை அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி கோயில் நடை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னர், சுவாமி மற்றும் தாயார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மாலை 5 மணிக்கு சுவாமி மற்றும் தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதி முன்பு இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி, தாயாருடன் திருவீதியுலா நடைபெற்றது. பூஜைகளை வரதராஜ அய்யங்கார் செய்திருந்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...