விளாத்திகுளத்தில் சீரான குடிநீர் விநியோகிக்க கோரி, காலிக் குடங்களுடன் பெண்கள் பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
விளாத்திகுளம் பேரூராட்சி பகுதி மக்களுக்கு தாமிரவருணி ஆற்றிலிருந்து சீவலப்பேரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 20 நாள்களாக பேரூராட்சிக்குள்பட்ட காமராஜ்நகர், சத்யாநகர், சிதம்பரநகர், பாரதி நகர், மீரான் பாளையம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில் காமராஜ் நகர் பகுதி பெண்கள் திமுக நகரச் செயலர் வேலுசாமி தலைமையில் காலிக் குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் போராட்டக் குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரு நாள்களுக்குள் குடிநீர் சீராக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.