புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கருப்பூர் தொடக்கப் பள்ளியில் மரம் சரிந்து 6 மாணவர்கள் காயம்

கோவில்பட்டி கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்  பள்ளி வளாகத்தில் திடீரென மரம் சரிந்து விழுந்தது. இதில், 6 மாணவர்- மாணவிகள் காயமடைந்தனர்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 2:45 am

DIN

கோவில்பட்டி கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்  பள்ளி வளாகத்தில் திடீரென மரம் சரிந்து விழுந்தது. இதில், 6 மாணவர்- மாணவிகள் காயமடைந்தனர்.
இப்பள்ளியில் சுமார் 30 பேர் படித்துவருகின்றனர். இந்நிலையில், பள்ளி வளாகத்தில் உள்ள பழமை வாய்ந்த ஆலமரம் புதன்கிழமை பிற்பகலில் திடீரென சரிந்து விழுந்ததாம். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த 3ஆம் வகுப்பு மாணவர் ஜான், மாணவி டென்சியா, மாலதி, மதுமிதா, அனுஷியா, 5ஆம் வகுப்பு மாணவி ஜான்சி ஆகியோர் காயமடைந்தனர்.
அவர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தகவலின்பேரில் கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ராஜேஸ்வரி, பள்ளி துணை ஆய்வாளர் செல்லகுருசாமி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து, மாணவர்- மாணவிகளிடம் பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.