அரசூர் பூச்சிக்காட்டில் மரக்கன்று நடும் விழா

தூத்துக்குடி  மாவட்டத்தை பசுமை சோலையாக்கும் நோக்கில் கிராம வளம் மற்றும் தூய்மைக்கான இருவாரத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

தூத்துக்குடி  மாவட்டத்தை பசுமை சோலையாக்கும் நோக்கில் கிராம வளம் மற்றும் தூய்மைக்கான இருவாரத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், சாத்தான்குளம்  அருகே  உள்ள அரசூர் பூச்சிக்காட்டில் சாலையோரம் 400 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
சாத்தான்குளம் வட்டாட்சியர்  ராஜீவ்தாகூர் ஜேக்கப் தலைமை வகித்து,  மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.  அரசூர் பூச்சிக்காடு ஜெம்ஸ் மரைன் கல்லூரி சேர்மன் கணேசன், செயலர் ராஜேஷ்,  படுக்கப்பத்து சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  வருவாய் ஆய்வாளர் பிரபு வரவேற்றார். இத்திட்டத்தில் சாலையோரம் 400 மரக்கன்றுகள் நடப்பட்டன.  இதில் வட்ட வழங்கல் அலுவலர் ரதிகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காயல்பட்டினம் பள்ளியில்...
காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
இப்பள்ளி தேசிய மாணவர் படை சார்பில், பள்ளி வளாகத்தில்  தலைமையாசிரியர் எம்.ஏ.எப். செய்யது அகமது  மரக்கன்றுகளை நட்டார்.  இதில், தேசிய மாணவர் படை அலுவலர் பீ.ஏ. சேக்பீர் முகம்மது, தேசிய மாணவர் படையினர்,  பள்ளி அசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி கல்லூரியில்...
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கோவில்பட்டி வனச்சரக அலுவலகம் இணைந்து கல்லூரியில் மரம் வளர்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் (பொ) சு.கிருஷ்ணசாமி தலைமை வகித்து, மரக்கன்று நடும் விழாவை தொடங்கிவைத்தார்.
வனச்சரக அலுவலர் சிவ்ராம், வனக் காப்பாளர் ராமசாமி, வனக் காவலர் பூலோக ஆழ்வார் உள்ளிட்டோர் மேற்பார்வையில்,  நாட்டு நலப் பணித் திட்ட மாணவர், மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com