சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நெடுங்குளத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்

நெடுங்குளத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலிலியல் வன்முறை மீறல்கள் குறித்த சட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  

News image
Updated On :12 அக்டோபர் 2017, 12:53 am

DIN

நெடுங்குளத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலிலியல் வன்முறை மீறல்கள் குறித்த சட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  
திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு,  அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி தலைமை வகித்தார். உதவி ஆய்வாளர் ரவிமதி வரவேற்றார். இதில், வழக்குரைஞர் சாத்ராக்,  மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க மாநில அமைப்பாளர் இசக்கிமுத்து,  மத்திய சமூக நல குடும்ப ஆலோசகர்கள் காமேஸ்,  பிரிஸ்ஸி ஆகியோர் பேசினர்.
இதில், பெண்களுக்கான சட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும்,  குழந்தைகள் பாதுகாப்புக்கு 109,  பெண்கள் பாதுகாப்புக்கு 1091 இலவச தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. தலைமை காவலர் சுமதி  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஊராட்சி செயலர் ராஜா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.