இந்து சேவா சங்க நிர்வாகிகள் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஸ்ரீஹரிஓம் இந்து சேவா சங்க நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம், உடன்குடி வைத்திலிங்கபுரம் விஸ்வகர்மா உச்சினிமாகாளி அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.


தூத்துக்குடி மாவட்ட ஸ்ரீஹரிஓம் இந்து சேவா சங்க நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம், உடன்குடி வைத்திலிங்கபுரம் விஸ்வகர்மா உச்சினிமாகாளி அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
பெரியசாமி ஆச்சாரி தலைமை வகித்தார். சேவா பாரதி அமைப்பின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமந்திரம், ராமமூர்த்தி, வெயில்ராஜ்,சிவபெருமாள், பரமசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக அமைப்பின் நிறுவனர்-தலைவர் பொன்மணி, மாநிலச் செயலர் சிவன், மாநிலத் தலைவர் மந்திரமூர்த்தி, மாவட்டச் செயலர்கள் கணேசன் (கோவை) ஹரிஹர அய்யப்பன் (தூத்துக்குடி)ஆகியோர் பேசினர். உடன்குடி வட்டாரத் தலைவராக பேச்சிமுத்து, துணைத் தலைவர்களாக கோவிந்தராஜன், சிவமுருகன், செயலர்களாக பாலசுப் பிரமணியன், சங்கரசுப்பு, முத்துராமலிங்கம், பொருளாளராக முத்துக்குமார், ஆலோசகர்களாக கிருஷ்ணமந்திரம், பரமசிவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சிவமுருகன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...