பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தாமரைமொழியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்

தாமரைமொழி ஊராட்சியில்   டெங்கு  காயச்சல்  தடுப்பு  விழிப்புணர்வு  முகாம்  நடைபெற்றது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 10:35 pm

DIN

தாமரைமொழி ஊராட்சியில்   டெங்கு  காயச்சல்  தடுப்பு  விழிப்புணர்வு  முகாம்  நடைபெற்றது.
 சாத்தான்குளம் ஒன்றிய ஆணையர் நாகராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.  வட்டார  வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், வட்டார மருத்துவ அலுவலர் ஐலின்சுமதி ஆகியோர்  முன்னிலை வகித்தனர். படுக்கபத்து சுகாதார ஆய்வாளர் மந்திரராஜன் வரவேற்றார். இதில் முதலூர் சித்தா மருத்துவர் அன்புமலர் , டெங்கு நோய் அறிகுறி,  அதனை  தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கி பேசினார்.  
தொடர்ந்து, வீடுகளில் தேங்கிய  டயர், தேங்காய் சிரட்டை உள்ளிட்ட  டெங்கு கொசு உற்பத்தியாகும் கழிவு பொருள்களை  சுகாதார மஸ்தூர் பணியாளர்கள் அப்புறப்படுத்தினர்.
 அனைத்து இடங்களில்  கொசு ஒழிப்பு  மருந்து தெளிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
இதில் , துணை வட்டார  வளர்ச்சி  அலுவலர் ஜோசப்ராஜ், சித்தா மருந்தாளுநர்கள் சரஸ்வதி, ராஜேஸ்வரி, சுகாதார  செவிலியர்கள்  சுசிலாதேவி, பாலசரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி  செயலர் ராமன் நன்றி கூறினார்.

அமுதுண்ணாக்குடியில்...
சாத்தான்குளம்  அருகே  உள்ள  அமுதுண்ணாக்குடி  ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு மாவட்ட  உதவி திட்ட  அலுவலர் சார்லெட்மேரி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
 ஒன்றிய  ஆணையர் நாகராஜன், வட்டார வளர்ச்சி  அலுவலர் சுப்பிரமணியன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டெங்கு வராமல் தடுக்கும் வகையில் ஊராட்சியில்  அனைத்து இடங்களிலும் தேங்கிய குப்பைகள், சிரட்டை,  டயர்கள்  அப்புறப்படுத்தப்பட்டன.  மேலும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு  உறுதி மொழி  எடுக்கப்பட்டு வீடுகளில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.   இதில்,  மண்டல துணை வட்டார வளர்ச்சி  அலுவலர் பாலசுப்பிரமணியன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  ஊராட்சி செயலர் ஜார்ஜ் சிங்கத்துரை நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.