பேருந்துகள் நின்று செல்லக் கோரி பால்குளத்தில் மக்கள் திடீர் மறியல்
ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள பால்குளத்தில் அனைத்துப் பேருந்துகளும் செல்ல வேண்டும் என வலிலியுறுத்தி, அப்பகுதியில் வெள்ளிக்கிழமை


ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள பால்குளத்தில் அனைத்துப் பேருந்துகளும் செல்ல வேண்டும் என வலிலியுறுத்தி, அப்பகுதியில் வெள்ளிக்கிழமை மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களில் 75 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி- திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள பால்குளம் வழியாக நாசரேத், சாத்தான்குளம் வழித்தடத்தில் சாலை பிரிந்து செல்கின்றது. இச்சாலையில் திருக்கோளூர், தேமாங்குளம், மானாட்டூர், சொக்கனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்நிலையில், திருநெல்வேலிலி - திருச்செந்தூர் வழித்தடத்தில் இயங்கும் எல்.எஸ்.எஸ். உள்ளிட்ட பேருந்துகள் பால்குளத்தில் நின்று செல்வதில்லையாம். இதனால், திருக்கோளூர் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களும், கிராம மக்களும் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே, அனைத்து எல்.எஸ்.எஸ். மற்றும் எஸ். எப். எஸ். பேருந்துகளும் பால்குளத்தில் நின்று செல்ல வேண்டும் என வலிலியுறுத்தி பா.ஜ.க.வினர் மாவட்ட ஆட்சியரிடமும், போக்குவரத்து அதிகாரிகளிடமும் ஏற்கெனவே மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதையடுத்து, அக்.20இல் சாலை மறியலில் ஈடுபடுவது என அக்கட்சியினர் எடுத்த முடிவின்படி, மக்களை திரட்டி பால்குளத்தில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் செய்தனர்.
அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் சிவமுருக ஆதித்தன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் நாராயண ராஜ், திருக்கோளூர் கிராமத் தலைவர் ஜெயபாண்டியன், ஆழ்வார்திருநகரி ஒன்றிய இளைஞரணிச் செயலர் சரவணன், நகரத் தலைவர் இசக்கிமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
காவல் ஆய்வாளர்கள் ஆழ்வார்திருநகரி கோகிலா, ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
இதனிடையே, 20-க்கும் மேற்பட்ட பெண்கள் மேலும் அங்கு திரண்டு மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீஸார் கைது செய்யாமல் வாகனத்தில் மட்டும் ஏற்றி அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து அப்பெண்கள் கூறியது: பேருந்துக்கள் காலிலியாக சென்றாலும் பால்குளத்தில் நின்று செல்வதில்லை.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்ட வேண்டும் என்பதற்காக 20க்கும் மேற்பட்ட பெண்களை காவல் துறையினர் கைது செய்ய மறுத்து விட்டனர் என்றனர் அவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...