கோவில்பட்டி அருகே தீ விபத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் புதன்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவில்பட்டியையடுத்த ஆவல்நத்தம் தெற்கு தெருவைச் சேர்ந்த ராஜா மகன் பத்திரகாளிமுத்து (6). இவர் அதே பகுதி வடக்குத் தெருவில் உள்ள தீப்பெட்டி ஆலை அருகே சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த கழிவுக்குச்சி அருகே திங்கள்கிழமை மாலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்த அவர், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இறந்தார். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இறந்த சிறுவன் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட தீப்பெட்டி ஆலை உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது உறவினர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் புதன்கிழமை காலை 8.50 மணி வரை நீடித்தது. இதையடுத்து, இறந்த சிறுவனுக்கு ஆலை நிர்வாகம் சார்பில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர். பின்னர் அரசு மருத்துவமனையில் சிறுவனின் சடலத்தை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுங்கச்சாவடியை இடமாற்றக் கோரி வாகன ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

தொழிலாளி கொலை: சகோதரா்கள் இருவா் கைது
அனுமதியின்றி எம் சாண்ட் ஏற்றி வந்த லாரி பறிமுதல்: ஒருவா் கைது

கொலம்பியா அதிபா் தோ்தல்: வலதுசாரி வேட்பாளா் வெற்றி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


