திருச்செந்தூரில் பைக் மீது கார் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் அங்கு உயிரிழந்தார்.
திருச்செந்தூரைச் சேர்ந்தவர் பத்மா (54). அஞ்சலக ஊழியர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் (40) என்பவருடன் பைக்கில் திருச்செந்தூர் - திருநெல்வேலி சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத கார் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதுலுதவிக்குப் பின்னர், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு செல்வக்குமார் இறந்தார்.
விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








