மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

காவிரி விவகாரம்: கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டிப்பதாகக் கூறி, கடலூரில் அனைத்துக் குடியிருப்போர்

Updated On :9 ஏப்ரல் 2018, 11:31 pm

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டிப்பதாகக் கூறி, கடலூரில் அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினர்  கருப்புக் கொடிகளுடன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் தலைவர் பி.வெங்கடேசன் தலைமை வகித்தார். 
இணைப் பொதுச் செயலர் பி.புருஷோத்தமன் முன்னிலை வகித்தார். விவசாய சங்கத் தலைவர்கள் கோ.மாதவன், கார்மாங்குடி எஸ்.வெங்கடேசன், நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன் கண்டன உரையாற்றினார். 
ஆர்ப்பாட்டத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், வாரியத்தை அமைக்க உறுதியான நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தியும், ஹைட்ரோ கார்பன், பெட்ரோ கெமிக்கல் மண்டலத் திட்டங்களை கைவிடக் கோரியும் முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் தங்களது கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். 
நிர்வாகிகள் மனோகரன், தேவநாதன், மாயவேல், பச்சையப்பன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். நிறைவில் ஆர்.சுகுமாறன் நன்றி கூறினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால் கையெழுத்து இயக்கம் நடத்துவதெனவும் ஆர்ப்பாட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.