சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

நாசரேத் பகுதி கடைகளில் பிளாஸ்டிக் பை வைத்திருந்தால் நடவடிக்கை

நாசரேத் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும்

Updated On :9 ஏப்ரல் 2018, 12:59 am

நாசரேத் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் மணிமொழி செல்வன் ரெங்கசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், நாசரேத் பேரூராட்சி பகுதியில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பைகள், கப்கள், தட்டுகள் பயன்படுத்துவதை முற்றிலும் தடுக்கும் பொருட்டு, அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது.  மேலும் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் வைத்திருக்கும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பேரூராட்சிக்குள்பட்டபகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்கப்படுவதாகவும், உபயோகப்படுத்தப்படுவதாகவும் பேரூராட்சி அலுவலகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
ஆதலால்  பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்கள் வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழி செல்வன் ரெங்கசாமி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.