தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனர் கைது

கோவில்பட்டியில் அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனத் தலைவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 

Updated On :18 ஏப்ரல் 2018, 7:03 am IST

கோவில்பட்டியில் அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனத் தலைவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 
மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனத் தலைவர் செல்வம் என்ற செல்லத்துரை.  இவர் காவல் துறை அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.  இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஏ.கே.எஸ். தியேட்டர் சாலையில் ஆங்காங்கே கூடியிருந்த இளைஞர்கள் அச்சாலை வழியாகச் செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாக காவல் நிலையத்திற்கு வந்த தகவலையடுத்து மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு  இடையூறு செய்யும் இளைஞர்களை கலைந்து செல்லும்படி கூறினர்.  அப்போது அங்கு வந்த செல்வம் மற்றும் 5 பேர், போலீஸாரை பணிசெய்யவிடாமல் தடுத்து மிரட்டினராம்.  இதையடுத்து, மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 
இந்நிலையில்,  செல்வம் என்ற செல்லத்துரையை (45)  செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.  அவரை விடுதலை செய்யக் கோரி அண்ணா பேருந்து நிலையம் அருகே மற்றும் இளையரசனேந்தல் சாலையில்  மறியல் போராட்டம் நடைபெற்றது. டி.எஸ்.பி.க்கள் தர்மலிங்கம் மற்றும் ஜெபராஜ் ஆகியோர் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட 49 பேரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.