எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2017-2018 ஆம் கல்வியாண்டில் கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா  நடைபெற்றது.

Updated On :18 ஏப்ரல் 2018, 7:04 am IST

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2017-2018 ஆம் கல்வியாண்டில் கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா  நடைபெற்றது.
விழாவுக்கு,  பால் ஏசுதாஸ் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற  நல்லாசிரியர் கீதாராஜ்  முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் நோபுள்ராஜ்  வரவேற்றார்.  தலைமை ஆசிரியர் பங்கராஜ் வாழ்த்திப் பேசினார்.  இதில் படிப்பில் வகுப்பில் முதல் இரு இடங்களைப் பெற்ற மாணவர்,  மாணவிகளுக்கும், 100 விழுக்காடு வருகைபுரிந்த மாணவர்,  மாணவிகளுக்கும் பரிசு, சான்றிதழ், பதக்கம் அளிக்கப்பட்டது.  தொடர்ந்து  மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  துணை முதல்வர் சந்தனகுமார்  நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அலுவலர்  சாந்தி,  ஆசிரியர்கள் சாந்தி, ஜெயராணி, லிலிங்கத்துரை மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.