நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஸ்ரீவைகுண்டத்தில் ஆர்ப்பாட்டம்

காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிபாவை கடத்திச் சென்று கொலை செய்தவர்களை கண்டித்து  ஸ்ரீவைகுண்டத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Updated On :18 ஏப்ரல் 2018, 7:02 am IST

காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிபாவை கடத்திச் சென்று கொலை செய்தவர்களை கண்டித்து  ஸ்ரீவைகுண்டத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் அஸாருதீன், பொருளாளர் நாசர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் முஹம்மது கண்டன உரையாற்றினார்.
மாவட்ட துணைத் தலைவர் தமீம் அன்சாரி, துணைச் செயலர்கள் சிக்கந்தர், இமாம்பரீது,  மாணவரணிச் செயலர் ஷமீம்,  ஸ்ரீவைகுண்டம் கிளைத் தலைவர் அஸ்கர் மற்றும் கிளை நிர்வாகிகள்,  உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  மாவட்டச் செயலர் அஸாருதீன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.