2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் நடிகர் சமுத்திரக்கனி பங்கேற்பு

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி  நடைபெற்று வரும் போராட்டத்தில்

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:49 am

DIN

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி  நடைபெற்று வரும் போராட்டத்தில் நடிகர் சமுத்திரக்கனி ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் அருகே 15 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில், திரைப்பட இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார். 
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது;  இந்த ஆலை நிரந்தரமாக மூடப்படும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றார். தொடர்ந்து, சிறுவர், சிறுமிகள் பேரணியாகச் சென்று முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.