வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் கோயிலில் சித்ரா பௌர்ணமி சிறப்பு பூஜை

சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஸ்ரீசுந்தராட்சி அம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமியையொட்டி சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 11:53 pm

DIN

சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஸ்ரீசுந்தராட்சி அம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமியையொட்டி சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கோயிலுக்கு புனித நீர் எடுத்து வரப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு மஞ்சள், திரவியம், பால், இளநீர், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அம்மனுக்கு புஷ்பாஞ்சலி, இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜையை கோயில் அர்ச்சகர்கள் நயினார், சுப்பிரமணியன் ஆகியோர் நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.