தூத்துக்குடியில் தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் - 2018 பணிகள் தொடர்பான முன்னேற்பாடுகள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசியது:
மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கத்தின் திட்டச் செயல்பாடுகள் குறித்து அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் சார்பில் தனியார் முகமை ஒன்றின் மூலம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள் தரவரிசைப் படுத்தப்பட உள்ளன.
இதில் சிறந்த மாவட்டம் மற்றும் மாநிலத்துக்கு அக்டோபர் 2 ஆம் தேதி தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்பட உள்ளன. கணக்கெடுப்பின்போது கிராம ஊராட்சிகளில், சேவை அளவிலான முன்னேற்றத்திற்கு 35 சதவீதம், பொது இடங்களில் தூய்மை குறித்த நேரடி கள ஆய்வு மூலம் 30 சதவீதம், கிராமப் பொதுமக்களின் கருத்தின் அடிப்படையில் 35 சதவீதம், என்ற வகையில் திட்டச் செயலாக்கம் 100 சதவீதம் மதிப்பீடு செய்யப்பட உள்ளது.
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் இக்கணக்கெடுப்பிற்கென, இலச்சினை மற்றும் தகவல் பலகை வெளியிடப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தூய்மைக் கணக்கெடுப்புக் குழு கிராமங்களுக்கு வரும் நாளில் பொதுமக்கள் தங்கள் கருத்துரைகளையும் ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம் என்றார் அவர்.
கூட்டத்தில், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் ரேவதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துலட்சுமி, தூய்மை பாரத இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓய்வு பெறுவது குறித்து எங்களிடம் ரோஹித் சர்மா எதுவும் கூறவில்லை: ஷுப்மன் கில்

மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து தில்லியில் போராட்டம் - புகைப்படங்கள்






